தமிழ்மக்களை அவமதிக்கும் யுனெஸ்கோவிருது
youtounesco
ஓட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் யுனெஸ்கோ-மதன் ஜீத் சிங் விருது!
தமிழ் இனத்தால் நிராகரிக்கப்பட்டவரும் அரச பயங்கரவாததிற்கு துணை போகின்றவருமான வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கு சமாதான விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளமையானது எமக்கு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவி போன்றவைகள் ஆனந்தசங்கரிக்கு சிங்கள இனவாதக் கட்சிகளால் பலமுறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளதன் பின்னணியை யுனெஸ்கோ நிறுவனம் நடுநிலையோடு ஆரயத் தவறி உள்ளதாக நாம் கருதுகிறோம்.
சிறிலங்காவின் சமாதானச் சூழ்நிலையை இல்லாது ஒழிப்பதற்கு தீய சக்திகளால் பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாதி கருணா “தமது கூட்டணிக்கு தலைமை தாங்குவதற்கு ஆனந்த சங்கரி பொருத்தமானவர்” என்று முன்மொழிந்துள்ளதையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
அகிம்சைவாதி அன்னை பூபதியையும், ஈழத்து காந்தி எனப் போற்றப்படும் தியாகி தீலிபனையும் பல இடங்களில் பல முறை கொச்சைப்படுத்தியவருக்கு மகாத்மா காந்தியின் நினைவாக விருது கொடுப்பது பெரும் முரண்பாடு ஆகும்.
ஆனந்த சங்கரி தமிழ் மக்கள் மீது பயங்கரவாதம் புரியும் ஓட்டுக்குழுக்களின் ஆலோசகராக செயற்பட்டு வருகிறார். அத்துடன் சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவும் அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார்.
மிக அண்மைய உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தாலும், இணைத் தலைமை நாடுகளினாலும், ஐநா சபையாலும் கண்டிக்கப்பட்ட செஞ்சோலை படுகொலைiயு ஆனந்த சங்கரி கண்டிக்கத் தவறி இருந்தார். அது மட்டுமன்றி செஞ்சோலை படுகொலையை நியாயப்படுத்திய சிங்கள அரசின் கருத்துக்களையே ஆனந்த சங்கரியும் வெளியிட்டிருந்தார்.
ஆனந்த சங்கரி தலைமை வகிக்கின்ற கட்சியின் இணையத் தளத்தில் ஒட்டுக் குழுக்களிற்கு ஆதரவான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அக் குழுக்களின் இணையத் தளங்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனந்த சங்கரி அரச பயங்கரவாதத்திற்கும், ஒட்டுக் குழுக்களிற்கும் ஆதரவு அளிப்பதை சகிப்புத்தன்மையுடன் எதிர்கொள்ளும் தமிழ்மக்களே உண்மையான சகிப்புத்தன்மை மிக்கவர்கள்.
யுனெஸ்கோ நிறுவனம் ஆனந்த சங்கரிக்கு மதன் ஜீத் சிங் விருதை அளிப்பதானது ஒட்டுமொத்த தமிழ் இனத்தை அவமதிப்பதுடன், இதற்கு முன்பு இவ் விருதைப் பெற்றவர்களையும் அவமதித்து மதன் ஜீத் சிங் விருதிற்கும் பெரும் களங்கத்தையும் உருவாக்குகிறது.
இங்கே கையொப்பம் இடுவதன் ழூலம் வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோவின் மதன் ஜீத் சிங் விருது வழங்கப்படுதற்கு எமது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.
உலகத்தமிழ்மக்கள்
youtounesco@stofanet.dk
இங்கே சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் பாரிசில் உள்ள யுனெஸ்கோ நிறுவனத்திடம் நேரடியாக நவம்பர் மாத முதல்நாளில் கையளிக்கப்படும்.
கையொப்பம் இடுபவர்களுக்கான குறிப்பு:
உங்கள் வலது கைப்பக்கம் உள்ள கட்டடங்களை நிரப்பி, tilføj என்னும் கட்டடத்தை அழுத்தவும். உங்கள் மின்னஞ்சல் எழுதவேண்டிய அவசியம் இல்லை.
சகிப்புத்தன்மைக்கான விருதிர்க்கு சிபார்சு செய்யப்பட்டவரின் அருவருடிகள் நாம் கையொப்பம் சேகரிப்பதை சகிக்கமுடியாமல் எமக்கு தரும் தொல்லைகள் காரணமாக கையொப்பம் இடுபவர்களின் விபரங்களை பிறர் பார்;க்கமுடியாததாக செய்துள்ளோம்.
Kontakt ejeren af denne underskriftindsamling